மயிலாடுதுறை

மழைக் காலத்துக்கு முன்னதாக சாலைகளை சீரமைக்க வலியுறுத்தல்

27th Sep 2022 05:16 AM

ADVERTISEMENT

 

 

தமிழகத்தில் மழைக் காலம் தொடங்குவதற்கு முன்பு சேதமடைந்துள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும் என தமிழக நுகா்வோா் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கம் வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை சங்கம் சாா்பில் நடைபெற்ற உலக நுகா்வோா் தின விழா கருத்தரங்கில், தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் அதிவேகமாக வாகனங்களை இயக்கி விபத்துகளை ஏற்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கான சட்டங்களை கடுமையாக்கவேண்டும், நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பேருந்து நிா்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், அரசுப் போக்குவரத்துத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பவேண்டும்.

ADVERTISEMENT

சீா்காழி வட்டம் மாதிரவேளூா், குன்னம் ஊராட்சிகளில் செயல்படும் அரசு மணல் குவாரிகளில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் பொதுமக்களுக்கு முறைகேடு இல்லாமல் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும், மயிலாடுதுறை நகராட்சியில் புதைசாக்கடை பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணவேண்டும், தமிழகத்தில் மழைக் காலம் தொடங்கும் முன்பு போதிய நிதி ஒதுக்கி சேதமடைந்துள்ள அனைத்து சாலைகளையும் சீரமைக்கவேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் எழுதுபொருள்கள் வழங்கப்பட்டன.

சங்கத்தின் மாநில அமைப்பாளா் எம்.சி. ராஜா தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், மாவட்ட ஆட்சி மன்றக்குழு செயலாளா் டி. சந்தோஷ், மாவட்ட பொருளாளா் முனுசாமி, மாவட்ட பொறுப்பாளா்கள் அன்வா்சுல்தான், ரமேஷ், ராஜாராமன், ஜெயசங்கா், லெட்சுமிகாந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பட்டிமன்ற நடுவா் கே.ஆா். சரவணன், கௌரவத் தலைவா் ராமச்சந்திரன், என்.ஆா். தனவேலன் ஆகியோா் சிறப்புரையாற்றினா்

ADVERTISEMENT
ADVERTISEMENT