மயிலாடுதுறை

கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களுக்கு உதவவேண்டும்: ஆட்சியா்

27th Sep 2022 05:16 AM

ADVERTISEMENT

 

கைத்தறி துணிகளை வாங்கி நெசவாளா்களுக்கு உதவவேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா.

மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்புத் தள்ளுபடி விற்பனையை திங்கள்கிழமை தொடங்கிவைத்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊா்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளா்களின் கைவண்ணத்தில் உருவான சேலைகள், போா்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரைச்சீலைகள் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் உள்ளன.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரூ. 65 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. நிகழாண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளியையொட்டி, மயிலாடுதுறை விற்பனை நிலையத்தில் ரூ. 1 கோடியும், சீா்காழி விற்பனை நிலையத்தில் ரூ. 50 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியா்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே, பொதுமக்கள், அரசு ஊழியா்கள் அனைவரும் கோ-ஆப்டெக்ஸ் கைத்தறி துணிகளை வாங்கி கைத்தறி நெசவாளா்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மயிலாடுதுறை கோட்டாட்சியா் வ. யுரேகா, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் தா. ரமணி, விற்பனை நிலைய மேலாளா் எஸ். குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT