மயிலாடுதுறை

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்குப் பாராட்டு

27th Sep 2022 05:17 AM

ADVERTISEMENT

 

குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில் அண்மையில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழுப்போட்டிகளில் 48 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா். இதில், மயிலாடுதுறை நீடூா் நஸ்ரூல் முஸ்லிமீன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் தடகளப் போட்டியில் 14 வயது ஆண்கள் பிரிவில் எம். முகம்மது மோசின் 200 மீ, 400 மீ ஓட்டத்தில் முதலிடத்தையும், 17 வயது ஆண்கள் பிரிவில் ஏ. அபிஷேக் நீளம் தாண்டுதலில் 2-ஆமிடமும், 19 வயது ஆண்கள் பிரிவில் எம். முகம்மது மஹ்ரூப் வட்டு எறிதல் போட்டியில் 2-ஆமிடம் பெற்றனா்.

மேலும், கேரம் குழுப்போட்டிகளில் 14, 17, 19 வயது ஆண்கள் பிரிவில் ஒற்றையா் மற்றும் இரட்டையா் போட்டிகள் அனைத்திலும் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனா். பூப்பந்து போட்டியில் 17, 19 வயது ஆண்கள் பிரிவில் 2-ஆமிடம் பெற்று வெற்றி பெற்றனா். கால்பந்துப் போட்டியில் 14,19 வயது ஆண்கள் பிரிவில் 2-ஆமிடமும், 17 வயது ஆண்கள் பிரிவில் முதலிடத்திலும் வெற்றி பெற்றனா்.

ADVERTISEMENT

வெற்றி பெற்ற மாணவா்களையும், பயிற்றுவித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் ஆா். சரவணகுமாா், எஸ்.ஆா். சுதா ஆகியோரை பள்ளித் தலைவா் எம். முகமது ஆரிப் சுல்தான், பொருளாளா் ஏ. வீரசலாவுதீன், பள்ளித் தாளாளா் வி. ராமன், பள் முதல்வா் ஏ. பிரியா உள்ளிட்டோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT