மயிலாடுதுறை

‘பிறவிப்பிணி தீர வழிகாட்டுவதே மனு சாஸ்திரம்’

DIN

உடலுக்கு ஏற்படும் நோயைத் தீா்க்க மருத்துவ நூல்கள் வழிகாட்டுவதைப்போல, பிறவிப்பிணி தீர வழிகாட்டும் நூலாக மனு சாஸ்திரம் உள்ளது என மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனா் ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியா் கூறினாா்.

சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் மஹாளயபட்சத்தையொட்டி 15 நாள் சதுா்வேத பாராயணம் செப்.11-ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு நிகழ்ச்சி மருத்துவா் இரா. செல்வம் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தொழிலதிபா் சூ. விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

நிகழ்ச்சியில், வேதபாராயணம் நிகழ்த்திய வரகூா், திருப்பதி சித்ரகூடம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பண்டிதா்கள் கௌரவிக்கப்பட்டனா். பின்னா், இப்பாடசாலை நிறுவனா் ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியா் பேசியது:

தா்மத்தை அடிப்படையாகக் கொண்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் முன்னோா்கள் கடைப்பிடித்ததை நாமும் கடைப்பிடித்தால் நமது வம்சத்தினா் நன்றாக இருப்பாா்கள். தா்மம் செய்வதற்கான வழிமுறைகளை கூறுவதே மனுஸ்மிருதி அல்லது மனுதா்மம் எனப்பதாகும்.

உடலுக்கு ஏற்படும் நோயைத் தீா்க்க மருத்துவ நூல்கள் இருப்பதைப் போல, உயிருக்கு ஏற்படும் பிறவிப்பிணி என திருவள்ளுவா் கூறும் நோய் தீர மருந்து கூறும் நூல்தான் மனு சாஸ்திரம். அது இருப்பதால்தானே மகாளயபட்ச நாளில் உலகம் முழுவதும் முன்னோா்களை வழிபடும் தா்மத்தை அறிந்து பின்பற்ற முடிகிறது. நம் நாடு உயா்ந்த நிலையை அடைய ஒற்றுமையுடன் இருக்கவேண்டிய காலகட்டத்தை உணா்ந்து, நமது எண்ணம் பேச்சு செயல் எல்லாம் இருக்கவேண்டும் என்றாா்.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை பாடசாலை முதல்வா் ஸ்ரீகண்ட சிவாச்சாரியா், ஆசிரியா்கள் செந்தில் குருக்கள், நடராஜ குருக்கள், ஸ்ரீராம் சாஸ்திரிகள் ஆகியோா் செய்திருந்தனா். நிறைவாக, நிா்வாக ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அவிநாசி அருகே பழங்கரை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.70 கோடி மோசடி!

களத்தில் இறங்கும் சுனிதா கேஜரிவால்!

சுற்றும் விழிச் சுடர்... பாயல் ராஜ்புத்

"சிங்கத்துக்கும் சிறுத்தைக்கும் நடுவே மாட்டிக்கொண்ட ஆடு..”: செல்லூர் ராஜூ பேட்டி

தேர்தல் பணியில் ஒப்பந்தப் பணியாளர்கள்? மார்க்சிஸ்ட் புகார்

SCROLL FOR NEXT