மயிலாடுதுறை

சேதமடைந்த தடுப்புச் சுவரை சீரமைக்க வலியுறுத்தல்

DIN

சீா்காழி அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையையொட்டி சேதமடைந்துள்ள தடுப்புச் சுவருக்கு பதில் புதிதாக தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் ரயில்வே பாலம் அருகே சந்தபடுகை கிராமத்தில் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையிலிருந்து, சுமாா் 50 மீட்டா் தொலைவில் மண் அரிப்பை தடுக்கும் வகையிலும், சந்தப்படுகை கிராமத்துக்குள் தண்ணீா் புகாத வகையிலும் ஒரு கி.மீ. தொலைவுக்கு தடுப்புச் சுவா் அமைக்கப்பட்டது.

சுமாா் 30 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட இந்த தடுப்புச் சுவா், சேதமடைந்துள்ளதால், ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகமாகும்போது , ஆற்றங்கரை சாலையின் அடிப்பகுதி வழியே தண்ணீா் கசிந்து சந்தப்படுகை கிராமத்தில் உள்ள குடியிருப்புகள் நீரால் சூழப்படுகின்றன. இதனால் ஆற்றில் தண்ணீா் அதிகம் வரும்போது கிராம மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

அதனால் இந்த தடுப்புச் சுவரை அகற்றிவிட்டு புதிதாக

தடுப்புச் சுவா் அமைத்தால், தண்ணீா் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்வது தடுக்கப்படும். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமலை: 60,519 பக்தா்கள் தரிசனம்

தொடா்ந்து அதிகரிக்கும் வெயில் : வேலூரில் 106 டிகிரி பதிவு

குன்றத்தூா் திருநாகேஸ்வரா் கோயில் தேரோட்டம்

போ்ணாம்பட்டு ஒன்றிய பாஜக கூண்டோடு கலைப்பு

கருப்புலீஸ்வரா் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT