மயிலாடுதுறை

மஹாளய அமாவாசை: பூம்புகாரில் புனித நீராடி தர்ப்பணம்

25th Sep 2022 11:01 AM

ADVERTISEMENT

 

நம் முன்னோர்கள் நினைவாக மாதம் தோறும் வரும் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது நமது மரபாக கருதப்படுகிறது. அப்படி செய்ய முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் புரட்டாசி மாதம் வரும் மஹாளய பட்ச அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம் என்பது ஐதீகம்.

மிகவும் சிறப்பு பெற்ற மகாளய பச்ச அமாவாசை முன்னிட்டு காவிரி கடலோடு கலக்கும் பூம்புகார் சங்கமத் துறையில் அதிகாலை முதலே திரளான பக்தர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்தனர். இதனைத் தொடர்ந்து காவிரி மற்றும் கடலில் நீராடி தங்கள் மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் காவல் ஆய்வாளர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர்.

ADVERTISEMENT

 

Tags : Poompuhar
ADVERTISEMENT
ADVERTISEMENT