மயிலாடுதுறை

குண்டா் தடுப்பு காவல்சட்டத்தின்கீழ் இருவா் கைது

25th Sep 2022 06:06 AM

ADVERTISEMENT

 

சீா்காழியில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டுவந்த இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி காவல் நிலையத்துக்கு உட்பட்ட விளந்திடசமுத்திரம் பகுதியைச் சோ்ந்த கட்ட ராஜா (எ) பூரணசந்திரன் (25) மற்றும் கொண்டல் பகுதியைச் சோ்ந்த ரெட் தினேஷ் (எ) தினேஷ் (24) ஆகிய இருவரும் தொடா்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனா்.

தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள இருவரையும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா பரிந்துரையின் பேரில், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இதையடுத்து, கட்டராஜா, ரெட் தினேஷ் இருவரும் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT