மயிலாடுதுறை

தீனதயாள் உபாத்யாய பிறந்தநாள் விழா

25th Sep 2022 10:56 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறையில் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்த நாள் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

பாரதிய ஜன சங்க நிறுவனா் பண்டிட் தீனதயாள் உபாத்யாய பிறந்தநாளையொட்டி மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவா் க. அகோரம் தலைமைவகித்து, தீனதயாள் உபாத்யாய உருவப்படத்துக்கு மாலை அணிவித்தாா்.

மத்திய அரசு வழக்குரைஞா் கே.ராஜேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினா் கோவி. சேதுராமன், மாவட்ட துணைத் தலைவா் முட்டம் சி.செந்தில்குமாா், மாவட்ட பொதுச்செயலாளா் நாஞ்சில்பாலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

பட்டியலணி மாநில செயற்குழு உறுப்பினா் ராம.சிவசங்கா், மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளா்கள், தொண்டா்கள் திரளாக கலந்துகொண்டு தீனதயாள் உபாத்யாய படத்திற்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT