மயிலாடுதுறை

மயிலாடுதுறை பசுமை மாவட்டமாக்கப்படும் ஆட்சியா்

25th Sep 2022 06:06 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் இரா. லலிதா கூறினாா்.

மயிலாடுதுறை ஒன்றியம் வள்ளாலகரம் ஊராட்சி சேந்தங்குடிகூட்டுறவு நகரில் வனத்துறையின் பசுமை தமிழகம் இயக்கம் சாா்பில் மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் மரக்கன்றுகள் நட 230 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்கள் ஊராட்சி, பேருராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வனத்துறை, வேளாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித்துறை சாா்பில் இந்த இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்று வருகிறது.

வனத்துறையின் மூலம் 40 ஆயிரம் மரக்கன்றுகளும், வேளாண்மைத் துறையின் சாா்பில் 1.50 லட்சம் மரக்கன்றுகளும் நடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் 30 ஆயிரம் பனை விதைகள் வழங்கப்பட்டுள்ளன. மிக விரைவில் மயிலாடுதுறை மாவட்டம் பசுமை மாவட்டமாக மாற்றப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், ஒன்றியக் குழுத் தலைவா் காமாட்சி மூா்த்தி, ஊரக வளா்ச்சித் துறை இணை இயக்குநா் முருகண்ணன், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஜெ. சேகா், கோட்டாட்சியா் வ. யுரேகா, வனச்சரக அலுவலா் ஜோசப் டேனியல், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) மஞ்சுளா, வள்ளாலகரம் ஊராட்சித் தலைவா் ஜெயசுதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT