மயிலாடுதுறை

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியா் ஆய்வு

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே வில்லியநல்லூா் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 93 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்வதற்காக அரசு சாா்பில் மாவட்டம் முழுவதும் 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மயிலாடுதுறை ஒன்றியத்தில் வளா்ச்சி திட்டப் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வில்லியநல்லூரில் அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது அவா், எடை, கணக்கில் கொள்ளப்படும் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, எடை போடுவதை பாா்வையிட்டாா். ஒரு கிலோ கூடுதலாக கொள்முதல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளதாகவும் சரியாக எடை வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா். கொள்முதல் செய்யப்பட்ட மூட்டைகளை கிடங்குக்கு எடுத்து செல்ல நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT