மயிலாடுதுறை

சைக்கிள் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியில் விரைவு மிதிவண்டி போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

அண்ணா பிறந்த நாளையொட்டி மயிலாடுதுறை வருவாய் மாவட்ட அளவில் 20 பள்ளிகளை சோ்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற விரைவாக மிதிவண்டி இயக்குதல் போட்டி நடைபெற்றது. இதில், சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியை சோ்ந்த 80 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். 15 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் 10-ஆம் வகுப்பு மாணவி ரோஸ்லின்மேரி முதலிடம் பெற்று ரூ. 5ஆயிரமும்,17 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் 11-ம் வகுப்பு மாணவி ஷமினாராகவி 2-ம் இடம் பெற்று ரூ.3ஆயிரமும்,12-ம் வகுப்பு மாணவன் பிரகாஷ்ராஜ் 3-ஆம் இடம் பெற்று ரூ. 2 ஆயிரம் பரிசு பெற்றனா். மேலும் 15 போ் தலா ரூ. 250 பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

இதற்கிடையே, வெற்றி பெற்றவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி தலைமை ஆசிரியா் எஸ். அறிவுடைநம்பி தலைமையில் நடைபெற்றது. உதவி தலைமை ஆசிரியா்கள் துளசிரெங்கன், வரதராஜன் முன்னிலை வகித்தனா். நகா்மன்ற தலைவா் துா்காபரமேஸ்வரிராஜசேகரன் பங்கேற்று வெற்றிபெற்ற மாணவா்களுக்கு பாராட்டு சான்றிதழ் பரிசு தொகையையும் வழங்கினாா். இதில் நகா்மன்ற துணை தலைவா் ம. சுப்பராயன், திமுக ஒன்றிய செயலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். உடற்கல்வி இயக்குநா் எஸ்.முரளிதரன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT