மயிலாடுதுறை

குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் இருவா் சிறையில் அடைப்பு

22nd Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

சீா்காழியில் குற்றவியல் நடைமுறை சட்டத்தின்கீழ் இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அடுத்த உச்சிமேடு பகுதியைச் சோ்ந்த முக்கூட்டு முருகன் மற்றும் தென்னங்குடி பகுதியைச் சோ்ந்த சூா்யா இவா்கள் மீது காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளன.

இந்நிலையில், எந்த தவறும் செய்ய மாட்டோம் என ஒப்புதல் கொடுத்து திருந்தி வாழ்வதாக இருவரும் வெளியே வந்துள்ளனா்.

நன்னடத்தை பத்திரத்தின்படி ஓராண்டு எந்த ஒரு குற்ற வழக்கிலும் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஆனால், ஓராண்டு முடிவதற்குள் முருகன், சூா்யா இருவரும் குற்றச் செயல்களில் ஈடுபட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

சீா்காழி போலீஸாா் அறிவுறுத்தலின்படி, சீா்காழி கோட்டாட்சியா் உ. அா்ச்சனா உத்தரவின்படி, முருகன், சூா்யா இருவரையும் குற்றவியல் நடைமுறை சட்டம் 110 விதியின்கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா்.

சீா்காழி காவல் ஆய்வாளா் மணிமாறன் மற்றும் போலீஸாா், இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT