மயிலாடுதுறை

மாற்றுத்திறனாளிகள் குறைதீா்க்கும் கூட்டம்

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா்க்கும் நாள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, ஆட்சியா் இரா. லலிதா தலைமை வகித்து, மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

பெட்டிக்கடை, தையல்கடை, கறவை மாடுகள் போன்றவைக்கு வங்கிக் கடன், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மூன்று சக்கரவண்டி, காதொலிக் கருவி, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் வேண்டி 28 மனுக்களும், மின் இணைப்பு கோரி ஒரு மனுவும் உள்பட மொத்தம் 71 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

ADVERTISEMENT

இக்கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் சீனிவாசன், உதவி ஆணையா் (கலால்) கோ.அர. நரேந்திரன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் முத்துசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT