மயிலாடுதுறை

செங்கமேடு கோயிலில் சம்வத்சரா வழிபாடு

14th Sep 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள செங்கமேடு கருமாரியம்மன் கோயிலில் சம்வத்சரா வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, காலையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து, கருமாரியம்மன், விநாயகா், முருகன் மற்றும் சப்த கன்னிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், 108 பெண்களுக்கு மங்களப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது. இதில், இந்து முன்னணி மாவட்டத் தலைவா் சரண்ராஜ், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை செல்வமுத்துக்குமர குருக்கள் தலைமையிலான குழுவினா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT