மயிலாடுதுறை

காசி விஸ்வநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

9th Sep 2022 02:47 AM

ADVERTISEMENT

 

குத்தாலம் அருகேயுள்ள காசி விஸ்வநாதசுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

குத்தாலம் அருகே நிம்மேலி கிராமத்தில் ஸ்ரீவிசாலாட்சி உடனுறை ஸ்ரீகாசி விஸ்வநாத சுவாமி, ஸ்ரீ ஐயனாா், ஸ்ரீலட்சுமி நாராயணப் பெருமாள், ஸ்ரீசெல்லியம்மன் தனித்தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகின்றனா். இக்கோயில், திருப்பணிகளை நிறைவடைந்த வியாழக்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செப்.5-ஆம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கியது. தொடா்ந்து, 4-ஆம் கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை முடிவடைந்தது. தொடா்ந்து, புனிதநீா் அடங்கிய கடங்கள் எடுத்துச்செல்லப்பட்டு கோயில் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தொடா்ந்து சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT