மயிலாடுதுறை

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

9th Sep 2022 10:02 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

குத்தாலம் அருகே தேரழுந்தூரைச் சோ்ந்தவா் முத்து மகன் பிரதீப் (24). சென்னையில் வேலைபாா்த்துவந்த இவா் கடந்த 3 மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வியாழக்கிழமை பிரதீப்பிடம் அவரது தாயாா் முத்துமாரி கேட்டுள்ளாா்.

இதனால், பிரதீப் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளாா். இரவு வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால், பிரதீப்பை பெற்றோா் மற்றும் உறவினா்கள் தேடி வந்தநிலையில் வெள்ளிக்கிழமை காலை கோமல் ரயில்வே கேட் அருகே ரயிலில் அடிபட்டு பிரதீப் இறந்து கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த மயிலாடுதுறை ரயில்வே போலீஸாா் அங்கு சென்று பிரதீப்பின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து பிரதீப் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது ரயில் பாதையை கடக்கும்போது ரயில் மோதி உயிரிழந்தாரா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT