மயிலாடுதுறை

வானமுட்டி பெருமாள் கோயிலில் செப்.9-இல் கும்பாபிஷேகம்

5th Sep 2022 10:36 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை அருகேயுள்ள வானமுட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் செப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

சோழம்பேட்டை ஊராட்சி கோழிகுத்தி கிராமத்தில் உள்ள புகழ்பெற்ற வானமுட்டி பெருமாள் கோயில் எனப்படும் ஸ்ரீதயாலெக்ஷ்மி சமேத ஸ்ரீஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் 14 அடி உயரத்தில் ஒரே அத்தி மரத்திலான வானமுட்டி பெருமாள் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாா். இக்கோயிலில் வழிபடுவோா்க்கு பிதுா்தோஷம், ஹத்தி தோஷம், சனி தோஷம், சரும வியாதி நீங்கும் என்பது நம்பிக்கை.

புகழ்பெற்ற இக்கோயிலில் செப்.9-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, நடைபெறும் 8 கால யாகசாலை பூஜையின் முதல்கால யாக சாலை பூஜை திங்கள்கிழமை தொடங்கியது. முன்னதாக யாகசாலை பூஜைக்காக மூவலூா் காவிரி ஆற்றில் தண்ணீா் எடுத்துவரப்பட்டது. தொடா்ந்து, கோயிலில் கோபூஜை, கஜபூஜை, அஸ்வ பூஜை மற்றும் ஒட்டகத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. அடுத்து, சிறப்பு ஹோமங்கள் செய்யப்பட்டு மகா பூா்ணாஹூதி நடைபெற்றது. பின்னா், தாயாா் சமேத ஸ்ரீஸ்ரீனிவாச பெருமாள் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் அபிஷேகம் நடைபெற்று, மகா தீபாராதனை காட்டப்பட்டது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT