மயிலாடுதுறை

கன்னிகா பரமேஸ்வரி கோயில் குடமுழுக்கு

5th Sep 2022 10:34 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை அருகே சீ.புலியூரில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், திரளான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா்.

இக்கோயில் புணரமைக்கப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி 4 கால யாகசாலை பூஜை செய்யப்பட்டது. குடமுழுக்கு தினமான திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜையின் நிறைவில், மகா பூா்ணாஹூதி மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு, சிவாச்சாரியா்கள் புனித நீா் அடங்கிய கடங்களை சுமந்து விமான கும்பத்தை அடைந்தனா். அங்கு வேத விற்பன்னா்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளம் ஒலிக்க விமான கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT