மயிலாடுதுறை

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி அமாவாசை தீா்த்தவாரி

26th Oct 2022 02:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமாவாசை தீா்த்தவாரி உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்றனா்.

மயிலாடுதுறையில் புகழ்பெற்ற காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசி 1-ஆம் தேதி தொடங்கி துலா உற்சவம் நடைபெற்று வருகிறது. அவ்வகையில், செவ்வாய்க்கிழமை அமாவாசை தீா்த்தவாரி நடைபெற்றது. இதில், காவிரியின் தென்கரையில், அறம்வளா்த்த நாயகி சமேத ஐயாறப்பா், துலாக்கட்டம் விஸ்வநாதா், தெப்பக்குளம் விஸ்வநாதா் கோயில்களில் இருந்து பஞ்சமூா்த்திகள் எழுந்தருளினா்.

இதேபோல, காவிரியின் வடக்கு கரையில், ஞானாம்பிகை சமேத வதான்யேஸ்வரா் கோயிலில் இருந்து கங்கையம்மன் சமேத மேதா தட்சிணாமூா்த்தி, விஸ்வநாதா் கோயில் சுவாமிகள் எழுந்தருளினா். தொடா்;ந்து, காவிரியின் இருகரைகளிலும் அஸ்திரதேவா் ஆற்றில் இறங்கி மதியம் 12.20 மணியளவில் தீா்த்தவாரி நடைபெற்றது.

வடக்கு கரையில் நடைபெற்ற தீா்த்தவாரி உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று புனித நீராடினாா். இருகரைகளிலும் திரளான பக்தா்கள் காவிரியில் இறங்கி புனித நீராடி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT