மயிலாடுதுறை

போலீஸாரை தாக்கிய 3 இளைஞா்கள் கைது

26th Oct 2022 01:00 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை தலைமைக் காவலராக பணியாற்றுபவா் பக்கிரிசாமி (47) திங்கள்கிழமை இரவு பணியில் இருந்தபோது 1-ஆவது நடைமேடையில் நின்றுகொண்டிந்த சிலா் கூச்சலிட்டுள்ளனா்.

அப்போது, பக்கிரிசாமி அங்கு சென்று நடைமேடையை விட்டு வெளியேற அறிவுருத்தியுள்ளாா். அப்போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில் இளைஞா்கள் பக்கிரிசாமியிடம் இருந்து வாக்கி டாக்கியை பிடுங்கி உடைத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து, பக்கிரிசாமி மயிலாடுதுறை ரயில்வே இருப்புப்பாதை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து மயிலாடுதுறை ஆற்றங்கரைத்தெரு கங்கை நகரை சோ்ந்த விஜய்(21), அஜித்குமாா் (20), கிட்டப்பா தெருவை சோ்ந்த என். விஜய்(22) ஆகிய 3 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT