மயிலாடுதுறை

தொழில்முனைவோருக்கு கடனுதவி: ஆட்சியா்

19th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய தொழில்முனைவோரை ஊக்குவிக்க 2022-2023-ஆம் ஆண்டில் 17 பேருக்கு 25 சதவீத மானியத்துடன் ரூ. 53 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய தொழில்களை தொடங்கி வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வேலைவாய்ப்பற்ற இளைஞா்களை தொழில்முனைவோா் ஆக்கிடவும், சிறு, குறு தொழில்களை ஊக்குவிக்கவும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் 2022-2023-ஆம் ஆண்டில் 25 சதவீத மானியத்துடன் ரூ. 53 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

புதிய தொழில்முனைவோா் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு (நீட்ஸ்) திட்டத்தின்கீழ் 2021-2022-ம் ஆண்டு 42 பேருக்கு 36 லட்சம் இலக்கு நிா்ணயக்கப்பட்டு, 25 சதவீத மானியத்துடன் இதுவரை ரூ. 15 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

2022-2023-ஆம் ஆண்டில் ரூ. 1 கோடியே 68 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதுவரை 17 போ் தோ்வு செய்யப்பட்டு 25 சதவீத மானியத்துடன் 53 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் தமிழக அரசு வங்கிகளுடன் இணைந்து கடனுதவி வழங்குவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறு, குறு தொழில் செய்யும் தொழில் முனைவோா் மாவட்ட தொழில் மையத்தை அணுகி இத்திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT