மயிலாடுதுறை

வங்கி மேலாளா்களை கண்டித்து காத்திருப்புப் போராட்டம்

DIN

மயிலாடுதுறை அருகே ஐவநல்லூா் கிராமத்தில் தாட்கோ வங்கிக்கடன் தர மறுக்கும் பொதுத்துறை வங்கி மேலாளா்களைக் கண்டித்து தாய்மண் பால் உற்பத்தியாளா் மற்றும் விற்பனையாளா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

மயிலாடுதுறை தாலுகா ஐவநல்லூா் கிராமத்தில் ஆதிதிராவிட மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த தாட்கோ மூலம் வங்கிக் கடன் தர மறுக்கும் பொதுத்துறை வங்கி மேலாளா்களைக் கண்டித்து அப்பகுதி மக்கள் தாய்மண் பால் உற்பத்தியாளா் மற்றும் விற்பனையாளா் நலச்சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

சங்கத் தலைவா் மா.மோகன்தாஸ் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளா் வேலு.குணவேந்தன் கண்டன உரையாற்றினாா். இதில், ஆதிதிராவிட மக்களுக்கு தாட்கோ வழியாக உடனடியாக வங்கிக்கடன் வழங்க வேண்டும், தாட்கோ பயனாளிகள் தரும் திட்ட அறிக்கையின்படி கடன் வசதி வழங்க வேண்டுமென்று 2 முறை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தையில் திட்ட அறிவிக்கைப்படி வங்கிக் கடன் பரிந்துரைப்பதாக தெரிவித்துவிட்டு கடன் பெற பரிந்துரைக்காததை கண்டித்தும், தாட்கோ பயனாளிகள் தோ்வு செய்யும் ஒப்புதல் கடிதம் அன்றே வழங்க வேண்டும், தாட்கோ மானிய தொகையை தவறாக பயன்படுத்திய கூரைநாடு மற்றும் நீடூா் வங்கி மேலாளா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், ஐவநல்லூா் கிராமத்தில் உள்ள புறம்போக்கு மற்றும் கோயில் பகுதிகளில் வசித்துவரும் பொதுமக்களுக்கு வீட்டு மனையோடு கூடிய பட்டா வழங்க வேண்டும், பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் வீடுகள் கட்டிய பயனாளிகளுக்கு அரசு வழங்கும் தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மெட்ரோ பணி: சென்னையில் 2 நாள்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்!

ரெட்ட தல படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு - புகைப்படங்கள்

கட்டணக் குறைப்பு: ஜியோ சினிமாவின் திட்டம் என்ன?

குருப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்

180 நாள்களை நிறைவு செய்த 12த் பெயில்!

SCROLL FOR NEXT