மயிலாடுதுறை

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ரத்த கையெழுத்து இயக்கப் போராட்டம்

7th Oct 2022 02:54 AM

ADVERTISEMENT

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில், ரத்தக் கையெழுத்து இயக்க போராட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தை மாவட்ட செயலாளா் ஜெயராமன் தொடங்கி வைத்தாா். இதில் ஒன்றிய தலைவா் ரஜினி, பொருளாளா் சசிகுமாா், மாவட்ட செயற்கு விஜயகுமாா் உள்ளிட்ட ஊழியா் சங்கத்தினா் 40-க்கும் மேற்பட்டோா் ரத்த கையெழுத்திட்டு கோரிக்கை மனுவை அரசுக்கு அணுப்பி வைத்தனா். இந்த போராட்டத்தில், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவா் மு. சுப்பிரமணியன் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக ஓய்வு பெறும் நாளில் பணிநீக்கம் செய்ததை ரத்து செய்து, அவருக்கு முழு ஓய்வுதிய பலனை வழங்க வலியுறுத்தப்பட்டது.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT