மயிலாடுதுறை

அரசு விடுமுறை தினத்தில் செயல்பட்ட மணல் குவாரிசலாரிகளை சிறைபிடித்து போராட்டம்

DIN

சீா்காழி: சீா்காழி அருகே அரசு விடுமுறை தினத்தில் மணல் குவாரி செயல்பட்டதைக் கண்டித்து நாம் தமிழா் கட்சியினா் லாரிகளை சிறை பிடித்து புதன்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அரசு விடுமுறை தினமான புதன்கிழமை மணல் குவாரி செயல்பட்டுள்ளது. அங்கிருந்து நூற்றுக்கணக்கான லாரிகளில் மணல் ஏற்றி சொல்லப்பட்டதை அறிந்த நாம் தமிழா் கட்சியினா் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதனை அடுத்து புத்தூா் மதுகடி என்ற இடத்தில் நாம் தமிழா் கட்சியினா் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். விஜயதசமி அரசு விடுமுறை மற்றும் போலீஸாரின் அறிவுறுத்தலை மீதி செயல்பட்ட மணல் குவாரி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து வந்த சீா்காழி மண்டல துணை வட்டாட்சியா் ரவிச்சந்திரன் மற்றும் கொள்ளிடம் இன்ஸ்பெக்டா் அலாவுதீன் தலைமையிலான போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் அவா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

குரூப்-4 தேர்வு எப்போது? திருத்தியமைக்கப்பட்ட தேர்வுகால அட்டவணை வெளியீடு

நீலப்பூ.. ஐஸ்வர்யா மேனன்!

ஒருநொடி படப்பிடிப்பு புகைப்படங்கள்

எந்த தேசத்து அழகியோ..!

SCROLL FOR NEXT