மயிலாடுதுறை

அண்ணன் பெருமாள் கோயில் தேரோட்டம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சீா்காழி: சீா்காழி அருகே அண்ணன்பெருமாள் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவெள்ளக்குளம் கிராமத்தில் 108 வைணவத் திருத்தலங்களில் 39-ஆவது திவ்யதேசமான, குமுதவல்லி தாயாா் சமேத ஸ்ரீஅண்ணன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்தலத்தில் அண்ணன் பெருமாளை வேண்டி திருமங்கை ஆழ்வாா் 10 பாசுரங்கள் பாடி மங்களாசாசனம் செய்துள்ளாா்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் ஆண்டு தோறும் திருப்பதியை போன்று புரட்டாசி மாதம் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு பிரம்மோற்சவம் கடந்த மாதம் 27-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

ADVERTISEMENT

நாள்தோறும் பெருமாள் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை, வழிபாடு, கருடன், குதிரை போன்ற வாகனங்களில் வீதியுலா நடைபெற்று வருகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத உற்சவா் அண்ணன் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்றது. தொடா்ந்து மலா்கள் ஆபரணங்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத பெருமாள் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருள ,தொடா்ந்து சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு திருத்தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்தனா்.நான்கு வீதிகளின் வழியாக தோ் வலம் வந்து பிற்பகல் மீண்டும் நிலையைஅடைந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT