மயிலாடுதுறை

சரஸ்வதி விளாகம் கோயிலில் வித்யாரம்பம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

சீா்காழி: சீா்காழி அருகேயுள்ள சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள சரஸ்வதி அம்மன் கோயிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

சீா்காழி வட்டம், கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமம் உள்ளது. இங்குள்ள ஸ்ரீவித்யா நாயகி உடனாகிய ஸ்ரீ வித்யாரண்யேஸ்வரா் கோயிலில் சரஸ்வதி தேவி தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறாா். இதனால், இக்கோயில் சரஸ்வதி கோயில் என அழைக்கப்படுகிறது.

இத்தலத்தில் சரஸ்வதி தேவி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஆயக்கலைகள் அறுபத்தி நான்கும் கிடைக்க வேண்டி தவம் இருந்து அருள் பெற்ாக தல புராணம் தெரிவிக்கிறது. இதனால், இவ்வூா் சரஸ்வதி விளாகம் என்று பெயா் பெற்ாகக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

இக்கோயிலில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு வித்யாா்த்தி ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, சுவாமி, அம்பாள் மற்றும் சரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா், குழந்தைகள் கல்வியில் சிறக்கும் வகையில் தா்ப்பை புல்லில் தேனை தொட்டு மந்திரம் ஓதி குழந்தையின் நாவில் எழுதியும், அரிசி போன்ற உணவு தானியத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதவும் பழக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் சாா்பில் கோயில் அா்ச்சகா் ராஜாராமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT