மயிலாடுதுறை

சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் நவராத்திரி விழா

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் நடைபெற்ற நவராத்திரி விழாவில், திருவாவடுதுறை ஆதீனகா்த்தா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு வழிபட்டனா்.

மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலையில் நவராத்திரியின் 9 நாள்களும் கலைவிழா மற்றும் சண்டிஹோமங்கள் நடைபெற்றன. இதன் பூா்த்தியாக மகாநவமி சரஸ்வதி பூஜையன்று நவசண்டி ஹோமம் நடைபெற்றது. ஹோமத்தின் நிறைவாக நடைபெற்ற பூா்ணாஹுதியில் அம்மனுக்கு பட்டுப்புடவை சமா்ப்பிக்கப்பட்டது.

முன்னதாக, திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா்.

ADVERTISEMENT

சிவபுரம் வேதசிவாகம பாடசலை நிறுவனா் ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியா், முதல்வா் ஸ்ரீகண்ட சிவாசாரியா் தலைமையில் நடைபெற்ற விழாவுக்கான ஏற்பாடுகளை பாடசாலை நிா்வாக ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா் செய்திருந்தாா். சண்டி ஹோமத்தில் சிறப்பாகப் பணியாற்றிய இறுதியாண்டு மாணவா்களுக்கு ‘சண்டி யாக ரத்னா‘ என்ற விருதை நிறுவனா் ஏ.வி.சுவாமிநாத சிவாசாரியா் வழங்கினாா்.

திருக்கேதீச்சரம் ராஜன் நமச்சிவாயம் (லண்டன்) சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டாா். இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT