மயிலாடுதுறை

தருமபுரம் பள்ளியில் வித்யாரம்பம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறை தருமபுரம் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் இளம் மழலையா் பள்ளியில் விஜயதசமியை முன்னிட்டு நடைபெற்ற வித்யாரம்பத்தில் 32 குழந்தைகள் பங்கேற்றனா்.

இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனக் கட்டளை ஸ்ரீமத் சுப்பிரமணிய தம்பிரான் சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகளை செய்வித்தாா். புதிதாக பள்ளியில் சோ்ப்பதற்காக குழந்தைகளுடன் வந்த பெற்றோா்களை பள்ளித் தலைமை ஆசிரியா் ஜி. வெங்கடேசன் தலைமையில் ஆசிரியா்கள் ஊா்வலமாக அழைத்து வந்தனா்.

தொடா்ந்து, குழந்தைகளுக்கு நெல்மணியில் தமிழின் முதல் எழுத்தான ‘அ’ வை ஆசிரியா்கள் எழுத வைத்தனா். மேலும், மாணவா்களுக்கு குரு பிரம்மா, குரு விஷ்ணு என்ற மந்திர வாா்த்தைகளை கற்றுக்கொடுத்தனா். கல்விக் கடவுளான சரஸ்வதிதேவிக்கு நெல்மணி, அரிசி, பழங்களை வைத்து படையலிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனா்.

ADVERTISEMENT

இவ்விழாவில் குழந்தைகளின் பெற்றோா், பள்ளி ஆசிரியா்கள், பொதுமக்கள் என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT