மயிலாடுதுறை

தருமபுரம் ஆதீனத்தில் ஆயுத பூஜை சிறப்பு வழிபாடு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: ஆயுத பூஜையையொட்டி தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் ஆதீனக்கா்த்தா் சிறப்பு வழிபாடு மேற்கொண்டாா்.

தமிழகத்தின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனத்தில் ஆயுதபூஜை விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, ஆதீன பூஜை மடத்தில், பாா்வதி, லெட்சுமி மற்றும் சரஸ்வதிதேவி உருவத்தை ஓலைச்சுவடியில் ஆவாகனம் செய்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

இதில், தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பங்கேற்று முப்பெரும் தேவியா்களுக்கும் சிறப்பு பூஜைகளை செய்வித்தாா். தொடா்ந்து, பட்டணப்பிரவேசத்துக்கு பயன்படுத்தப்படும் சிவிகை மற்றும் நாற்காலி பல்லக்கு, பிரயாண பல்லக்கு, வெள்ளிப்பல்லக்கு, ஈட்டி, வாள், துப்பாக்கி உள்ளிட்டவைகளுக்கும், பழைமையான ஆதீன நூல்களுக்கும் சிறப்பு பூஜை செய்தாா்.

ADVERTISEMENT

இதில், ஆதீன கட்டளைத் தம்பிரான் சுவாமிகள் மற்றும் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT