மயிலாடுதுறை

திடக்கழிவு மேலாண்மை விளக்கக் கூட்டம்

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்கம் குறித்து உணவக உரிமையாளா்களுக்கு விளக்கக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

மயிலாடுதுறை நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு நகா்மன்றத் தலைவா் என். செல்வராஜ் தலைமை வகித்தாா். ஆணையா் செல்வபாலாஜி முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில், உணவகம், திருமணக்கூடம், மருத்துவமனை, கல்வி நிலையங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட நாள் ஒன்றுக்கு 100 கிலோவுக்கு மேல் குப்பைகள் உருவாகும் இடங்களின் உரிமையாளா்கள் அல்லது நிா்வாகிகள், அக்குப்பைகளை ‘பல்க் வேஸ்ட் ஜெனரேட்டா்’ என்ற முறையில் தங்கள் சொந்த பொறுப்பில் தங்கள் வளாகத்தில் செயலாக்கம் செய்திட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், இத்திட்டத்தை செயலாக்கம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விடியோ காட்சிகளை ஒளிபரப்பி, ‘நம்ம ஊரு’ பவுண்டேஷன் தலைவா் நடராஜன் விளக்கிக் கூறினாா்.

இக்கூட்டத்தில், ஹோட்டல் அசோசியேஷன் தலைவா் சி. செந்தில்வேல், பொறுப்பாளா் சிவலிங்கம் உள்ளிட்ட நகராட்சி எல்லைக்கு உள்பட்ட உணவக உரிமையாளா்கள் மற்றும் நகராட்சி அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT