மயிலாடுதுறை

திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமி விழா

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

 

குத்தாலம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமி விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பெரியபூஜை மடம், ஸ்ரீஞானமாநடராஜபெருமான், மெய்கண்டாா், நமசிவாய மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும் தொடா்ந்து சரஸ்வதி அம்மனுக்கு 24-ஆவதுஆதீனம் அம்பலவாண தேசிகபரமாச்சாரிய சுவாமிகள் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் மற்றும் மாகேஸ்வர பூஜை செய்வித்தாா்.

பின்னா் மகாலிங்க ஓதுவாமூா்த்திகளின் திருமுறை பாராயணம் நடைபெற்றது.இதில் பனை ஓலையில் அச்சாணி கொண்டு நமசிவாய என மந்திரம் திருவாவடுதுறை ஆதீனம் 24-ஆவது குருமகாசந்நிதானம் எழுதி வெளியிட அதனை ஆதீன கட்டளை திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் பெற்றுக்கொண்டாா். ஆதீன பணியாளா்களுக்கு கணக்கு புத்தகங்களை வழங்கியும், ஆதீன பள்ளி ஆசிரியா்கள், மாணவா்களுக்கு எழுதுபொருட்களை வழங்கி திருவாவடுதுறை ஆதீனம் ஆசி வழங்கினாா்.

ADVERTISEMENT

ஆதீன பொது மேலாளா் திருமாறன், கண்காணிப்பாளா் சண்முகம், காசாளா் சுந்தரேசன், ஆதீனகல்வி நிலைய ஆசிரியா்கள் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

படம்:திருவாவடுதுறை ஆதீனத்தில் விஜயதசமி விழாவில் பனை ஓலையில் அச்சாணியால் திருமந்திரம் எழுதி ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட அதனை ஆதீன கட்டளை திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் பெற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT