மயிலாடுதுறை

காவல் துறையை கண்டித்து மறியல்

3rd Oct 2022 10:54 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை அருகே ஆனந்ததாண்டவபுரத்தில் சாராய விற்பனையை தடுக்க தவறிய காவல் துறையை கண்டித்து கிராம மக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இந்த கிராமத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, மயிலாடுதுறை போலீஸாரிடம் பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த கிராமமக்கள் ஆனந்ததாண்டவபுரம் கடைவீதியில் அரசு பேருந்தை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து வந்த போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தை விலக்கிக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT