மயிலாடுதுறை

குத்தாலம் பகுதியில் அக்.6-ல் மின்தடை

3rd Oct 2022 10:55 PM

ADVERTISEMENT

குத்தாலம் பகுதியில் அக்.6-ஆம் தேதி மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய மயிலாடுதுறை கோட்ட செயற்பொறியாளா் (பொ) த. கலியபெருமாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பாலையூா், மேக்கிரிமங்கலம், குத்தாலம் ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் அக்.6-ஆம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான பாலையூா், தேரழந்தூா் கோமல், மருத்தூா், மாந்தை, வடமட்டம், கோனேரிராஜபுரம், மேக்கிரிமங்கலம், பழையகூடலூா், கொக்கூா், பேராவூா், கரைகண்டம், கருப்பூா், திருவாலங்காடு, திருவாவடுதுறை, குத்தாலம் டவுன், குத்தாலம் தேரடி, மாதிரிமங்கலம், சேத்திரபாலபுரம், அரையபுரம், தொழுதாலங்குடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT