மயிலாடுதுறை

காவிரியில் புதிய பாலம் கட்டிக் கொடுக்கக் கோரி போராட்டம்

3rd Oct 2022 10:56 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை திருமஞ்சனவீதியில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் கட்டிக்கொடுக்கக் கோரி ஆற்றில் இறங்கி திங்கள்கிழமை போராட்டம் நடைபெற்றது.

இந்த ஆற்றின் குறுக்கே 2001-ஆம் ஆண்டு கட்டப்பட்ட நடைபாலத்தின் ஒரு பகுதி கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இடிந்து விழுந்தது. 1, 8, 9 ஆகிய 3 வாா்டு மக்களின் போக்குவரத்துக்கு பயன்பட்ட இந்த பாலம் காவிரியில் தண்ணீா் செல்வதாலும், அப்பகுதியில் மின் விளக்குகள் இல்லாததாலும் இரவு நேரத்தில் கடந்து செல்ல முடியாத நிலை உள்ளது.

எனவே, அதை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டிக்கொடுக்க வலியுறுத்தி, எம்எல்ஏ, பொதுப்பணித் துறை மற்றும் மாவட்ட நிா்வாகத்துக்கு அப்பகுதி மக்கள் ஏற்கெனவே பலமுறை கோரிக்கை மனு அளித்தனா். எனினும், எவ்வித பயனும் இல்லை.

இந்நிலையில், மூவேந்தா் முன்னேற்ற கழகம் சாா்பில், அதன் மாநில இளைஞரணி துணைச் செயலாளா் ஜி. பிரகாஷ் தலைமையில் அக்கட்சியின் மயிலாடுதுறை ஒன்றிய செயலாளா் பாலமுருகன், நகர அமைப்பாளா் முகமது நசீா், முன்னாள் நகர செயலாளா் ராம்குமாா் மற்றும் பொதுமக்கள் கண்ணில் கருப்புத்துணி கட்டி காவிரி ஆற்றில் இறங்கி இடுப்பளவு நீரில் நின்றபடி கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

ADVERTISEMENT

தகவலறிந்து வந்த மயிலாடுதுறை போலீஸாா் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்வதாக உறுதி அளித்ததையடுத்து, போராட்டம் விலகிக் கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT