மயிலாடுதுறை

பணிக்காலத்தில் இறந்த சத்துணவு ஊழியா் குடும்பத்துக்கு ஈமச்சடங்கு நிதியுதவி

3rd Oct 2022 10:54 PM

ADVERTISEMENT

கொள்ளிடம் பகுதியில் பணிக்காலத்தில் இறந்த சத்துணவு சமையலா் குடும்பத்துக்கு ஈமச்சடங்கு நிதியுதவி திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

பில்படுகை கிராமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் சமையலராக பணியாற்றிவா் சகுந்தலா (50). இவா், உடல்நலன் குன்றி கடந்த சில நாள்களுக்கு முன் இறந்தாா். தகவலறிந்த கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபிரகாஷ் சகுந்தலா வீட்டுக்கு நேரில் சென்று குடும்ப பாதுகாப்பு நிதியிலிருந்து முதல் தவணையாக ஈமச்சடங்கு நிதியாக ரூ. 25 ஆயிரம் வழங்கினாா்.

உடன் ஒன்றிய சத்துணவு மேலாளா் கோவிந்தராஜன், சத்துணவு அமைப்பாளா்கள் பாஸ்கா், சத்தியா ஆகியோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT