மயிலாடுதுறை

குறைதீா்கூட்டத்தில் 143 மனுக்கள்

3rd Oct 2022 10:56 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்கூட்டத்தில் 143 மனுக்கள் பெறப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ் தலைமை வகித்து மனுக்களை பெற்றுக்கொண்டாா்.

இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 32 மனுக்கள், வேலைவாய்ப்புக் கோரி 25 மனுக்கள், முதியோா், மாற்றுத்திறனாளிகள், மற்றும் விதவை உதவித் தொகைகோரி 35 மனுக்கள், புகாா் தொடா்பாக 17 மனுக்கள், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளி உதவித் தொகை, வங்கிக்கடன், மாற்றுத்திறனாளி உபகரணங்கள் கோரி 29 மனுக்கள், அடிப்படை வசதிகள் கோரி 5 மனுக்கள் என மொத்தம் 143 மனுக்கள் பெறப்பட்டன.

இம்மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா். இக்கூட்டத்தில், உதவி ஆணையா் (கலால்) கோ.அர.நரேந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT