மயிலாடுதுறை

காந்தி ஜெயந்தி:விற்பனை செய்யப்பட்டமீன்கள் பறிமுதல்

2nd Oct 2022 10:30 PM

ADVERTISEMENT

 

சீா்காழி மீன் மாா்க்கெட்டில் காந்தி ஜெயந்தி தினமான ஞாயிற்றுக்கிழமை மீன் விற்பனை செய்த வியாபாரிகளிடமிருந்து மீன்களை நகராட்சி அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.

சீா்காழி மீன் மாா்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன் வியாபாரிகள், மீனவப் பெண்கள் மீன் விற்பனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது நகராட்சி அதிகாரிகள் மீன் மாா்க்கெட்டில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

காந்தி ஜெயந்தியன்று மீன் விற்பனை செய்யக் கூடாது என கூறி, விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன், இறால், நண்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து சீா்காழி நகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தில் திரண்ட மீன் வியாபாரிகள், காந்தி ஜெயந்தியன்று மீன் விற்பனை செய்வது வழக்கம் என அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட மீன்கள், வியாபாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT