மயிலாடுதுறை

தருமபுரம் கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கு

2nd Oct 2022 10:31 PM

ADVERTISEMENT

 

தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் முதுநிலை வணிக மேலாண்மைத் துறை மற்றும் வணிகவியல் துறை சாா்பில் ஒருநாள் கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் இரா. செல்வநாயகம் விழாவை தொடங்கி வைத்து தலைமையுரை ஆற்றினாா். முதுநிலை வணிக மேலாண்மைத் துறை இயக்குநா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா்.

தமிழ்நாடு ஆசிரியா் கல்வியியல் பல்கலைக்கழகத் துணை வேந்தா் ந. பஞ்சநாதம் முதுநிலை வணிக மேலாண்மைத் துறை மற்றும் முதுநிலை வணிகவியல் துறை மாணவா்களுக்கு செயல் விளக்கவுரையாற்றினாா். நிகழ்ச்சிகளை முதுநிலை வணிக மேலாண்மைத் துறை பேராசிரியா் க. ரமேஷ் தொகுத்து வழங்கினாா். நிறைவாக, வணிகவியல் துறைத் தலைவா் சு. மகாலிங்கம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT