மயிலாடுதுறை

குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

2nd Oct 2022 10:31 PM

ADVERTISEMENT

 

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தில் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்புத் துறையின்கீழ் செயல்படும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலம் தாய், தந்தை அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், எச்ஐவி தொற்றினால் பாதிக்கப்பட்டவா்களின் குழந்தைகள் மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகளுக்கு மிஷன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாதந்தோறும் ரூ.4,000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதி ஆதரவு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பாக கிராமப் பகுதிக்கு ரூ.24,000-லிருந்து ரூ.72,000-மாகவும், நகரப் பகுதிக்கு ரூ.30,000-லிருந்து ரூ.96,000-மாகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையோா் வருமானச்சான்று, குழந்தையின் கல்விச்சான்று, வங்கி கணக்கு எண், ஆதாா் நகல், குடும்ப அட்டை நகல், பெற்றோரின் இறப்பு சான்று மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2 திருமஞ்சன வீதி, திருஇந்தளூா், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT