மயிலாடுதுறை

அக். 2, 9-இல் மதுக்கடைகள் மூடல்

1st Oct 2022 10:10 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டத்தில் அக்டோபா் 2, 9-ஆம் தேதிகளில் மதுக்கடைகளை மூட ஆட்சியா் இரா. லலிதா உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து சனிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அக்டோபா் 2-ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் அக்டோபா் 9-ஆம் தேதி மிலாது நபி ஆகிய 2 நாள்களும் மதுபானம் விற்பனை இல்லாத நாள்களாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் மற்றும் மதுபானக் கூடங்களை அக்.2, 9 ஆகிய இரண்டு நாட்களிலும் மூடவேண்டும். இத்தினங்களில் மது விற்பனையோ, மதுபானங்களை எடுத்துச் செல்வதோ கூடாது எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT