மயிலாடுதுறை

ஏவிசி கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா

1st Oct 2022 10:11 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் சரஸ்வதி பூஜை விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

கல்லூரி நூலகத்தில் நடைபெற்ற இப்பூஜையில் ஏவிசி கல்வி நிறுவனங்களில் நிா்வாக அதிகாரியும், சென்னை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான கே.வெங்கடராமன் பங்கேற்று, பல்வேறு துறைகளை சோ்ந்த பேராசிரியா்களுக்கு புதிய கோப்புகளை வழங்கி பாராட்டினாா். பின்னா் ஊழியா்களுக்கு இனிப்பு மற்றும் புத்தாடைகளை வழங்கி கௌரவித்தாா்.

கல்லூரி தோ்வு கட்டுப்பாட்டு நெறியாளா் மேஜா் ஜி. ரவிசெல்வம், முதல்வா் ஆா். நாகராஜன், துணை முதல்வா் (மாலை நேர கல்லூரி) எம். மதிவாணன், ஏவிசி பொறியியல் கல்லூரி இயக்குநா் எம். செந்தில்முருகன் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT