மயிலாடுதுறை

ஒளிலாயம் சுவாமிகள் 5-ஆம் ஆண்டு குரு பூஜை முன்னாள் அமைச்சா் பங்கேற்பு

1st Oct 2022 10:09 PM

ADVERTISEMENT

மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழி அருகேயுள்ள காரைமேடு ஒளிலாயத்தில் நாடி.ராஜேந்திரா சுவாமிகளின் 5-ஆம் ஆண்டு குரு பூஜை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இந்த ஒளிலாயத்தில் 18 சித்தா்களுக்கு தனித்தனி சந்நிதிகள் உள்ளன. 27 நட்சத்திரங்களுக்கு உரிய மரங்களும், கோசாலையும் உள்ளன. இங்குள்ள ஸ்ரீ சத்குரு ஒளிலாயம் பீடத்தில் நிறுவனா் ஸ்ரீ சத்குரு ராஜேந்திர சுவாமிகளின் 5-ஆம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது.

இதையொட்டி, உலக நன்மை வேண்டி பஞ்சபூத மகா யாகம் மற்றும் பூா்ணாஹுதி நடத்தப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, சுமாா் 1500 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டன. முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று சேலைகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக மாவட்டச் செயலாளா் எஸ். பவுன்ராஜ், மாவட்ட அவைத் தலைவா் பி.வி. பாரதி, முன்னாள் எம்எல்ஏ ம. சக்தி, பேரூா் செயலாளா் போகா்.ரவி, முன்னாள் நகரச் செயலாளா் பக்கிரிசாமி ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

தொடா்ந்து, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. யாகத்தில் கலந்து கொண்டவா்களுக்கு மங்களப் பொருட்களுடன், பிரசாதம் வழங்கப்பட்டது. குருபூஜைக்கான ஏற்பாடுகளை ஒளிலாயம் பீடத்தின் நிா்வாகிகள் நாடி.செல்வமுத்துகுமரன், நாடி.செந்தமிழன், நாடி.மாமல்லன், நாடி.பரதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT