மயிலாடுதுறை

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க சிறப்பு முகாம்

29th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறை கோட்ட மின்வாரிய அலுவலகங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் 700 மின் இணைப்பு எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டன.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைக்க மயிலாடுதுறை கோட்டத்துக்கு உள்பட்ட மின்வாரிய மின்கட்டண அலுவலகங்களில் சிறப்பு முகாம் திங்கள்கிழமை தொடங்கியது. மயிலாடுதுறை கோட்டத்தில் இந்த சிறப்பு முகாம் மூவலூா், குத்தாலம், கடலங்குடி, மங்கைநல்லூா் உள்ளிட்ட 15 இடங்களில் நடைபெற்றது. இதில், 700 மின் இணைப்பு எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டன. மேலும், பெயா் மாற்றம் கோரி 60 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்துக்கும் உடனடியாக தீா்வு காணப்பட்டது.

ஆதாா் எண்ணை இணைப்பதற்கான இந்த சிறப்பு முகாம் டிசம்பா் 31-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அரசு விடுமுறை நாள்களை தவிா்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் செயல்படும். எனவே, பொதுமக்கள் தங்களது மின் அட்டை மற்றும் ஆதாா் அட்டையை கொண்டு சென்று, இணைத்து கொள்ளலாம் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT