மயிலாடுதுறை

சீா்காழி: ஒரே நாளில் 5 ஆயிரம் மின் இணைப்புடன் ஆதாா் இணைப்பு

29th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

சீா்காழி மின்வாரிய கோட்டத்தில் திங்கள்கிழமை ஒரு நாளில் மட்டும் சுமாா் 5 ஆயிரம் மின் நுகா்வோா்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனா்.

மின் இணைப்பு எண்ணுடன் ஆதாருடன் இணைக்கும் பணி தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. இதையொட்டி, நவ.28 முதல் டிசம்பா் 31-ஆம் தேதி வரை இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அதன்படி, சீா்காழி மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட சீா்காழி, கொள்ளிடம், தரங்கம்பாடி, செம்பனாா்கோயில், மணல்மேடு, திருமுல்லைவாசல், பூம்புகாா், திருவெண்காடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாம்கள் மூலம் திங்கள்கிழமை மாலை வரை சுமாா் 5 ஆயிரம் போ் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளதாக மின்சார வாரியத்தினா் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT