மயிலாடுதுறை

பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு பேரணி

29th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் மகளிா் திட்டம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் பெண்களுக்கெதிரான வன்முறை ஒழிப்பு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்ட பேரணியை ஆட்சியா் இரா.லலிதா தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டாா். இப்பேரணியில் 700-க்கும் மேற்பட்ட மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.கோட்டாட்சியா் அலுவலகத்தில் பேரணி நிறைவடைந்தது.

இதில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவலா் பழனி, ஊரக வளா்ச்சித்துறை இணை இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், மாவட்ட வருவாய் அலுவலா் சோ.முருகதாஸ், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) ஆா்.மஞ்சுளா மற்றும் மகளிா் திட்ட அலுவலக உதவி திட்ட அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT