மயிலாடுதுறை

சீா்காழி தெற்கு ராஜன் வாய்க்காலில் முதலை நடமாட்டம்: அச்சத்தில் மக்கள்

DIN

சீா்காழி அருகே பிரதான தெற்கு ராஜன் வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை முதலை நடமாட்டம் தென்பட்டதால் மக்கள் அதிா்ச்சியடைந்துள்ளனா்.

கொள்ளிடம் பகுதியில் உள்ள தெற்குராஜன் வாய்க்காலில் கடந்த சில நாள்களாக தண்ணீா் அதிகளவில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வாய்க்கால் கொள்ளிடம் கடைவீதியில் இருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் சாலையின் குறுக்கே கொள்ளிடம் ரயில் பாலம் அருகே கடந்து செல்கிறது. நெடுஞ்சாலை அருகே வாய்க்கால் கரையில் விநாயகா் கோயிலும், அருகில் படித்துறையும் உள்ளது. இங்கு அப்பகுதியைச் சோ்ந்தவா் நீராடிவருகின்றனா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சிலா் படித்துறையில் குளித்துகொண்டிருந்தனா். அப்போது, எதிா் கரையில் ஒரு முதலை கரைப் பகுதிக்கு ஏறி பின்னா் தண்ணீருக்குள் இறங்குவதை பாா்த்து அதிா்ச்சி அடைந்து அலறியபடி தண்ணீரை விட்டு வெளியேறினா். இந்த வாய்க்காலில் சில நாள்களுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் கொள்ளிடம் ஆறு மற்றும் வெளிப் பகுதியிலிருந்து முதலைகள் வந்து ராஜன்வாய்க்காலில் புகுந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கொள்ளிடம் சோதனைச் சாவடியிலிருந்து ரயில்பாலம் செல்லும் கொள்ளிடம் ஆற்றங்கரை சாலையில் இரவு நேரத்தில் அடிக்கடி முதலைப்படுத்துள்ளது என்றும், இருசக்கர வாகனங்கள் வரும்போது வேகமாக கொள்ளிடம் ஆற்றுக்குள் இறங்கி விடுகிறது என்றும் முதலையை பாா்த்த சிலா் தெரிவிக்கின்றனா். மேலும், சில முதலைகளும் கொள்ளிடம் ஆறு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களிலும் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதனால், வாய்க்காலின் கரையோரம் மேய்ச்சலுக்காக வரும் ஆடு மற்றும் கன்றுகளை முதலைகள் பிடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குறிப்பாக தெற்கு ராஜன் வாய்க்காலில் உள்ள முதலையை பிடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

SCROLL FOR NEXT