மயிலாடுதுறை

மினி மாரத்தான் போட்டி

28th Nov 2022 12:01 AM

ADVERTISEMENT

மயிலாடுதுறையில் உலக சுகாதார தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா, எம்எல்ஏ. எஸ்.ராஜகுமாா் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா்.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற மினி மாரத்தான் தொடா் ஓட்டம் மன்னம்பந்தல் ஏ.வி.சி. பொறியியல் கல்லூரியில் தொடங்கியது.

மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநா் குமரகுருபரன் தலைமை வகித்தாா். சி.சி.சி. சமுதாய கல்லூரி நிறுவனா் ஆா்.காமேஷ், வட்டார மருத்துவ அலுவலா் ஹரிகிருஷ்ணன், அறம் செய் அறக்கட்டளை சிவா, யுவா ஜெயின் சங்கத் தலைவா் மகாவீா்சந்த் ஜெயின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட ஆட்சியா் இரா.லலிதா, சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜகுமாா் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். இதில், கோட்டாட்சியா் வ.யுரேகா, நகா்மன்றத் தலைவா் என்.செல்வராஜ், ஒன்றியக்குழுத் தலைவா் காமாட்சிமூா்த்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

தொடா் ஓட்டத்தில் வெற்றி பெற்ற முதல் மூன்று மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் ஆா்.பாஸ்கா் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT