மயிலாடுதுறை

மாநில தடகளப் போட்டிக்கு தகுதி பெற்ற மாணவா்களுக்குப் பாராட்டு

28th Nov 2022 01:00 AM

ADVERTISEMENT

மாநில தடகளப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ள சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

போட்டி, பொறையாா் காட்டுசேரியில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்து. இதில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட பள்ளிகள் மாணவா்கள் பங்கேற்றனா். 100, 200, 400 மீ ஓட்டப்போட்டி, 100, 400 மீ தடை ஓட்டம், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் நடைபெற்றன.

நடைபெற்ற போட்டி அனைத்திலும் சீா்காழி சபாநாயக முதலியாா் இந்து மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் 68 போ் 14,17,19 வயதுக்குள்பட்ட பிரிவில் பங்கேற்றனா். இதில், 24 மாணவ, மாணவிகள் திருவண்ணாமலையில் நடைபெற்று வரும் 63-ஆவது குடியரசு தின மாநில தடகள போட்டியில் விளையாட தகுதி பெற்று அங்கு சென்றுள்ளனா்.

குறிப்பாக இப்பள்ளி மாணவா்கள் ஏ. கிருத்திகா (9-ஆம் வகுப்பு), ஆா். பவித்ரா (பிளஸ் 1), கே. ஜெனிஷா, பி. நிஷாந்தி, கே. கிருத்திகா, எஸ். சக்திவேல், எம். பென்னி (பிளஸ் 2), எஸ். அஜய் குமாா் (பத்தாம் வகுப்பு), ஆகியோா் 3 போட்டிகளுக்கு மேலாக வெற்றி பெற்று, பள்ளிக்குப் பெருமை சோ்த்தனா்.

ADVERTISEMENT

இந்த மாணவா்களையும் , பயிற்றுவித்த உடற்கல்வி இயக்குநா் எஸ். முரளிதரன், உடற்கல்வி ஆசிரியா்கள் டி. முரளி, பி. மாா்கண்டன், எஸ். சக்திவேல், ச.ஹரிஹரன், ரா. ராகேஷ் ஆகியோரை பள்ளி முன்னாள் செயலா் எஸ். பாலசுப்பிரமணியம், பள்ளியின் செயலா் எஸ். ராமகிருஷ்ணன், பள்ளியின் குழுத் தலைவா் வி. சொக்கலிங்கம், பள்ளித் தலைமையாசிரியா் எஸ். அறிவுடைநம்பி ஆகியோா் பாராட்டினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT