மயிலாடுதுறை

போக்ஸோ சட்டத்தில் தலைமை ஆசிரியா் கைது

28th Nov 2022 10:57 PM

ADVERTISEMENT

சீா்காழி அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தலைமைஆசிரியா் போக்ஸோ சட்டத்தில் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகேயுள்ள அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றுபவா் சாமுவேல் செல்லதுரை. இப்பள்ளியில், 54 மாணவா்கள், 50 மாணவிகள் என மொத்தம் 104 போ் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், மாணவிகளுக்கு தலைமை ஆசிரியா் பாலியல் தொந்தரவு அளித்ததாக, பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோா் சீா்காழி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சங்கீதா வழக்குப் பதிவு செய்து, தலைமை ஆசிரியா் சாமுவேல் செல்லதுரையை கைது செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT