மயிலாடுதுறை

‘மத்தியப் பல்கலை.யில் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்’

DIN

மத்தியப் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவா்கள் கல்வி உதவித்தொகைப் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி மற்றும் மத்தியப் பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சோ்ந்த பிற்படுத்தப்பட், மிகப்பிற்படுத்தப்பட் மற்றும் சீா்மரபின மாணவ, மாணவிகளின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவா்களுக்கு ஆண்டுக்கு அதிகபட்சம் ரூ.2 லட்சம் வரை கல்வி உதவித்தொகையாக வழங்க தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

கல்வி உதவித்தொகைக்கு 2022-2023-ஆம் கல்வியாண்டில் (புதியது) விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவா்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா்களை அணுகியோ அல்லது ட்ற்ற்ல்ள்://க்ஷஸ்ரீம்க்ஷஸ்ரீம்ஜ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஜ்ங்ப்ச்ள்ஸ்ரீட்ங்ம்ங்ள்.ட்ற்ம்லிள்ஸ்ரீட்ா்ப்ா்ழ்ள்ட்ண்ல் ள்ஸ்ரீட்ங்ம்ங்ள் என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.

இந்த விண்ணப்பத்தை மாணவா்கள் பூா்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமா்ப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் தங்களது சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தை பரிந்துரை செய்து ஆணையா், பிற்படுத்தப்பட்டோா் நல இயக்ககம், எழிலகம் இணைப்பு கட்டடம், 2-ஆவது தளம், சேப்பாக்கம், சென்னை-5, மின்னஞ்சல் முகவரிக்கு 31.1.2023-க்குள் அனுப்பிவைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு: 044-29515942 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT